நமது சொந்த முயற்சிகளால் மட்டுமே நமக்கு விமோசனம்! யாருடைய கருணையாலும் தயவாலும் அல்ல!!
முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற.. 

 முதலாம் ஆண்டு மருத்துவம், பொறியியல் , வர்த்தக மேலாண்மை பயிலும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 2013-14 ஆம் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவம், பொறியியல், செவிலியர், வர்த்தக மேலாண்மை போன்ற தொழிற்கல்வியில் முதலாம் ஆண்டு பயிலும், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம். 

தகுதியான மாணவ, மாணவிகள் www.desw.gov.inஎன்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என புது டெல்லியில் உள்ள மைய முப்படை வீரர் வாரியம் தெரிவித்துள்ளது. 

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 22 ஆம் தேதிக்குள், மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Applications invited from Ex-servicemen and Ex-Indian Coast Guards and their widows/wards under PM´s Scholarship Scheme 2013-14 by 30th November 2013 (in English)
Information Brochure 
Application Form for 2013-14 Para wise guidlines for filling up of Application Form 
Payment cum Renewal Form